தஞ்சையில் தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன் ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திடம் பேசுகையில், “தஞ்சை கோயில் குடமுழுக்கை தமிழில் நடத்த வேண்டும் என்று கேட்க வேண்டிய நிலைமையில் தமிழர்களாக நாம் இருப்பது வருந்தத்தக்கதாகும். ஏனென்று சொன்னால் கட்டிய மன்னன் தமிழன், கட்டிய சிற்பிகள் தமிழர்கள், தமிழ் மன்னனால் சோழ மண்ணின் தலைநகர் தஞ்சையில் இந்தக் கோயில் கட்டப்பட்டது.
தமிழ் மண்ணில் கட்டப்பட்ட தஞ்சை கோயிலில் சமஸ்கிருதத்தில் குடமுழுக்கு நடத்துவது மன்னிக்க முடியாததாகும், இதனை ஒருபோதும் ஏற்கமுடியாது. தஞ்சையில் நடைபெறும் குடமுழுக்கு மட்டுமல்ல, தமிழ்நாடு முழுவதும் உள்ள கோயில்களில் நடத்தப்படும் குடமுழுக்குகள், அர்ச்சனைகள் தமிழில்தான் இருக்க வேண்டும், தமிழில் மட்டுமே நடத்தப்பட வேண்டும்.