தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

எம்ஜிஆருக்கும் பிரபாகரனுக்குமிடையே காவிய நட்பு - பழ. நெடுமாறன் நெகிழ்ச்சி - தமிழீழ தலைவன் பிரபாகரன்

பிரபாகரனும், எம்ஜிஆருக்கும் கருத்து வேறுபாடு இருந்தது என்று சட்டப்பேரவை உறுப்பினர் செம்மலை கூறுவது உண்மை அறியாத நிலை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என பழ. நெடுமாறன் தெரிவித்துள்ளார்.

pala nedumaaran about prabakaran mgr friendship, எம்ஜிஆர் பிரபாகரன் நட்பு, தமிழீழ தலைவன் பிரபாகரன், விடுதலை புலிகள் பிரபாகரன்
பழ நெடுமாறன்

By

Published : Jan 9, 2020, 8:41 AM IST

விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் குறித்த சட்டப்பேரவை உறுப்பினர் செம்மைலையின் கருத்து குறித்து பேசிய தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன், “எம்ஜிஆர் மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றபோது, இந்திய ராணுவத்திற்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையே மோதல் ஏற்பட்டுவிட்டது.

அப்போது நானும் திராவிடர் கழக தலைவர் வீரமணியும், எம்ஜிஆருக்கு அவசர செய்தி அனுப்பிவிட்டு போர் நிறுத்தம் செய்யப்படவேண்டும்; இந்திய ராணுவம் ஈழத் தமிழர்களையும் கொன்று குவிக்கிறது. நீங்கள் ஏதாவது செய்ய வேண்டுமென தெரிவித்தோம். உடல்நிலை சரியில்லாத நிலையிலும், அப்போது அமெரிக்கா சென்றிருந்த ராஜீவ் காந்தியை நேரில் சந்தித்து போர் நிறுத்தம் செய்ய கூறி வற்புறுத்தினார் என்பதை இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.

'அரசின் ஆதவுடன் ஜே.என்.யு. தாக்குதல் அரங்கேறியுள்ளது' - சித்தராமைய்யா குற்றச்சாட்டு

இப்படி அவர் உயிருள்ளவரை பிரபாகரனுக்கும், விடுதலைப்புலிகளுக்கும் உதவியாக இருந்தார். ஒரு போதும் செய்த உதவியை அவர் நிறுத்தவில்லை என்பதையும் குறிப்பிட விரும்புகிறேன். வழிதவறி சென்றார் என சட்டப்பேரவை உறுப்பினர் செம்மலை போன்றோர் கூறுவது தவறானது. பிரபாகரன் ஒருபோதும் வழிதவறி செல்லவில்லை. அவர் ஈழத்தமிழர்களுக்கு சுதந்திர நாடு அமைக்க வேண்டும் என்பதில் கடைசி வரை உறுதியாக சென்றவர்.

நீதிமன்ற அனுமதிக்காக காத்திருக்கும் சேவல் சண்டை

ஆகவே பிரபாகரனுக்கும், எம்ஜிஆருக்கும் கருத்து வேறுபாடு உள்ளது என்பது போன்று சட்டப்பேரவை உறுப்பினர் செம்மலை கூறுவது உண்மை அறியாத நிலை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். எம்ஜிஆருக்கும் பிரபாகரனுக்குமிடையே காவிய நட்பு இருந்தது” என்றார்.

சட்டப்பேரவை உறுப்பினர் செம்மலை கருத்து குறித்து பேசிய பழ. நெடுமாறன்

ABOUT THE AUTHOR

...view details