தமிழ்நாடு

tamil nadu

2023-24 Budget: எகிறப்போகும் உணவுப்பொருட்களின் விலை - எச்சரிக்கும் ப.சிதம்பரம்

By

Published : Feb 11, 2023, 5:03 PM IST

2023-24 Budget: நடப்பாண்டு 2023-24 பட்ஜெட்டில் உணவுக்கு, உரங்களுக்கு வேண்டிய மானியத்தை மத்திய அரசு அறிவிக்காதது மக்கள் விரோத செயல் என ப.சிதம்பரம் குற்றம் சாட்டியுள்ளார். அதே நேரத்தில் மன்மோகன்சிங் ஆட்சியில் நாட்டில் 7.5 சதவீதம் வளர்ச்சி இருந்ததாகவும் தற்போது அவை 5.6 சதவீதமாக குறைந்துள்ளாகவும் தெரிவித்தார்.

Etv Bharat
Etv Bharat

2023-24 Budget: எகிறப்போகும் உணவுப்பொருட்களின் விலை - எச்சரிக்கும் ப.சிதம்பரம்

2023-24 Budget: தஞ்சை:மத்திய அரசு வெளியிட்ட 2023-24 பட்ஜெட்டில் உணவுக்கு தரவேண்டிய மானியத்தையும், உரங்களுக்குத் தர வேண்டிய மானியத்தையும் நிறுத்தியது மக்கள் விரோத செயல் என ப.சிதம்பரம் குற்றம் சாட்டியுள்ளார்.

தஞ்சை நகரை அடுத்த ஞானம் ஸ்கூல் ஆஃப் பிசினஸ் கல்லூரி (Tanjore Gnanam School of Business College) வளாகத்தில் சேம்பர் ஆப் காமர்ஸ் அண்ட் இண்டஸ்ட்ரி (Chamber of Commerce and Industry) சார்பில் மத்திய பட்ஜெட் 2023-24 குறித்த கருத்தரங்கம் (Seminar on Union Budget 2023-24) இன்று (பிப்.11) நடைப்பெற்றது. இந்நிகழ்ச்சியில், முன்னாள் மத்திய நிதித்துறை அமைச்சரும், மாநிலங்களவை உறுப்பினருமான ப.சிதம்பரம் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

செல்வந்தர்களுக்கான பட்ஜெட்: அப்போது மேடையில் பேசிய அவர், 'வேலைவாய்ப்பை உருவாக்குவதில் சிறுகுறு தொழில்களின் பங்கு அதிகம் என்றார். கரோனா காலத்தில் சிறுகுறு தொழில்கள் பெரும்பகுதி முடக்கப்பட்டதாகவும், அவைகளுக்கான எந்த ஒரு சிறப்பு அம்சமும், அவற்றை முன்னேற்றுவதற்கான எந்த ஒரு செயல்திட்டமும் இந்த 2023-24 பட்ஜெட்டில் இல்லை எனவும் தெரிவித்தார். இதன் விளைவாக, உணவுப்பொருட்கள் மற்றும் உரப்பொருட்களின் விலை அதிகரிக்க உள்ளதாக கூறினார்.

ஜிஎஸ்டி அதிக அளவு கட்டுபவர்கள் ஏழை எளியவர்கள் தான் என்றும் அவர்களுக்கான எந்த நிவாரணமும் இந்த பட்ஜெட்டில் இல்லை எனவும் கூறினார். மேலும், பெரும் பணக்காரர்கள், செல்வந்தர்களுக்கான பட்ஜெட்டாக தான் உள்ளதாகவும், இருபது ஆண்டுகள் 8 சதவீதம் வளர்ச்சியை அடைந்தால் தான், நாடு முன்னேற்றம் அடைய முடியும் எனவும் தெரிவித்தார். ஆனால், அதே நேரத்தில், கடந்த பத்து ஆண்டுகளில் 5.6 சதவீதம் தான் வளர்ச்சி அடைந்துள்ளதாகவும், முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் ஆட்சியில் 7.5 சதவீதம் இருந்ததாகவும் தெரிவித்தார்.

உணவுப்பொருட்கள் விலை அதிகரிக்கும்:ஆண்டுக்கு இரண்டு சதவீதம் வளர்ச்சி என்றிருந்தது, தற்போது குறைந்துள்ளதாக அவர் குற்றம் சாட்டினார். இடுபொருள்களுக்கும், உரங்களுக்கும் மானியம் தேவைப்படும் மானியத்தை நிறுத்தியதால் அவற்றின் விலைகள் உயர உள்ளதாக குற்றம் சாட்டினார். எனவே, உணவுப் பொருள்களுக்கும், உரங்களுக்கும் மானியம் வழங்க வேண்டும் என்றும் மத்திய அரசிற்கு சுட்டிக்காட்டியுள்ளார். மேலும் அவற்றை தர மறுப்பது மக்கள் விரோத செயலாகும் எனவும் எந்த மக்களுக்கும் சலுகைகள் வழங்கக்கூடிய நிதிநிலை அறிக்கை இந்த 2023-24-ல் இல்லை என அவர் மேலும் குற்றம் சாட்டினார்.

மேலும் பேசிய அவர், இந்த 2023-24 நிதிநிலை அறிக்கையால் பெரிய பணக்காரர்கள் தங்களது செல்வங்களை பெருக்கிக் கொள்வதற்கான வாய்ப்பாக உள்ளதே தவிர ஏழைகளுக்கானதாக இல்லை' எனத் தெரிவித்தார். இந்த கருத்தரங்கு நிகழ்ச்சியில் எம்எல்ஏ நீலமேகம், சேம்பர் ஆப் காமர்ஸ் நிர்வாகிகள் உள்ளிட்டோர் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க: பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிராக 200 நாளாக போராட்டம்.. விவசாயிகளை சந்திக்க சென்ற வெற்றிச்செல்வன் கைது.. அரசியல் தலைவர்கள் கண்டனம்..

ABOUT THE AUTHOR

...view details