சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தில் உடல் உறுப்புகளை விரைவாக கொண்டு செல்லும் ட்ரோன் அறிமுகம் தஞ்சாவூர்: சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தில் உள்ள தொழில்நுட்ப வணிக இன்குபேட்டர்களில் அடைகாக்கப்பட்ட 9 புதிய தயாரிப்புகளை இந்திய அரசின் தொழில்நுட்ப மேம்பாட்டு நிதி இயக்குநரகம், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் இயக்குனர் மற்றும் விஞ்ஞானி திருமதி நிதி பன்சால் கலந்து கொண்டு வெளியிட்டார்.
அதில் மனித உறுப்புகளை கொண்டு செல்லும் பெட்டி, டிரோன் போக்குவரத்து மூலம் கொண்டு செல்லுதல், மருத்துவ சாதனங்கள், மருந்துகள், தடுப்பூசிகள், ரத்தப் பொருட்கள், மனித உறுப்புகள் போன்ற முக்கியமான மருத்துவப் பொருட்களை குறிப்பாக தொலைதூர அல்லது அணுக முடியாத பகுதிகளில் விரைவாக வழங்க முடியும். ட்ரோன்கள் மூலம் மற்ற மருத்துவமனைக்கு மருத்துவ சேவை செய்யப்படுகிறது.
சாலை போக்குவரத்து வழியாக உறுப்புகளைக் கொண்டு செல்லுவது வழக்கமான அமைப்பாகும். இதில் போக்குவரத்து நெரிசல் காரணமாக பல சவால்களை எதிர்கொள்ள வேண்டிய சூழல் உள்ளது. மேலும், உடலுக்கு வெளியே உள்ள உறுப்புகளின் மட்டுப்படுத்தப்பட்ட ஆயுட்காலம் விரைவான போக்குவரத்தை அவசியமாக்குகிறது. எனவே புதிய கண்டுபிடிப்பான இந்த பாக்ஸ் 3D அச்சிடப்பட்ட, குறைந்த எடை, IoT இயக்கப்பட்ட மருத்துவப் போக்குவரத்துப் பெட்டியாகும், ட்ரோன்களைப் பயன்படுத்தி மனித உறுப்புகளை பாதுகாப்பான மற்றும் திறமையான விநியோகத்திற்காக வழங்குகிறது.
இந்த பெட்டியின் எடை 5 கிலோவிற்கும் குறைவானது மற்றும் மென்பொருள் இருப்பிடம், வெப்பநிலை மற்றும் பேட்டரி ஆயுள் பற்றிய துல்லியமான தகவல்களை வழங்குகிறது. இதே போல் பசுக்களில் பால் உற்பத்தியை மேம்படுத்த கால்நடை சத்து மூலிகை பொடி, மற்றும் கல்வி நோக்கத்திற்காக மொபைல் ரோபோக்கள், பாதுகாப்பான லாக்கர்கள், அதிக சுமைகளை இழுக்கும் தொழிற்சாலைகளுக்கு ரோபோனெடிக்ஸ் ஆட்டோமேஷன் என 9 புதிய கண்டுபிடிப்புகள் அறிமுகம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டன.
விஞ்ஞானி நிதி பன்சால் தனது உரையில், ”தனியார் தொழில்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்காக தற்காப்பு R&D பட்ஜெட்டில் 25% உள்நாட்டு தொழில்நுட்ப மேம்பாட்டிற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. GoI கொள்கையின்படி, உள்நாட்டில் வடிவமைக்கப்பட்ட, உருவாக்கப்பட்ட மற்றும் உற்பத்தி செய்யப்படும் பாதுகாப்புக்காக உருவாக்கப்பட்ட தயாரிப்புகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
மேக் இன் இந்தியா மற்றும் மேட் ஃபார் வேர்ல்ட் ஆகியவற்றை ஊக்குவிக்க அரசாங்கத்தின் அர்ப்பணிப்பைக் காட்டுகிறது” என்றார், இந்நிகழ்ச்சியில் பல்கலைக்கழக துணைவேந்தர் வைத்தியசுப்பிரமணியம், பல்கலைக்கழக முதன்மையர் ( திட்டம் & மேம்பாடு) சுவாமிநாதன், மத்திய அரசின் பாதுகாப்பு ஆய்வு மற்றும் மேம்பாட்டு அமைப்பின் கூடுதல் இயக்குனர் சிவக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: சொத்து கேட்டு டார்ச்சர் செய்ததால் மருமகள் கொலை..! போலீசில் சரணடைந்த மாமனார்!