தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு வட்டாட்சியரிடம் தமிழ்நாடு ஆதிதிராவிடர் முன்னேற்றக் கழக தஞ்சை மாவட்ட செயலாளர் பொய்கை சின்னராஜா அளித்துள்ள கோரிக்கை மனுவில், “ ஒரத்தநாடு நகரம், கிராமப் பகுதிகளில் கரோனா தொற்று உறுதி செய்து பல பகுதிகள் தடை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் மதுப் பிரியர்கள் தகுந்த இடைவெளியை பின்பற்றாமல்
அவர்கள் பொதுவெளியில் நடமாடுவது பொதுமக்கள் இடையே கரோனா வைரஸ் தொற்று அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
எனவே வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த ஒரத்தநாட்டில் உள்ள மதுக்கடைகளை தற்காலிகமாக மூட உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் கேட்டுக் கொண்டார்.
இந்நிகழ்வில், கோ, ஜெய்சங்கர் ஒருங்கிணைப்பாளர் காவிரி சமவெளி பாதுகாப்பு இயக்கம், திமுக நகர செயலாளர் கிருஷ்ணகுமார், காங்கிரஸ் வட்டார தலைவர் மோகன்தாஸ், மனிதநேய மக்கள் கட்சி நூர் முகமது, மதிமுக நகர செயலாளர் மணிவண்ணன், நாம் தமிழ் கட்சி ஒன்றிய செயலாளர் கலை, உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர், விவசாய சங்கங்கள் பல்வேறு இயக்கங்களின் தலைவர்களும் உடனிருந்தனர்.
மதுக் கடைகளை தற்காலிகமாக மூட உத்தரவிட கோரிக்கை - மதுக்கடைகள்
தஞ்சாவூர்: ஒரத்தநாட்டில் உள்ள மதுக்கடைகளை தற்காலிகமாக மூட உத்தரவிட வேண்டும் என வட்டாட்சியரிடம் தமிழ்நாடு ஆதிதிராவிடர் முன்னேற்ற கழகத்தினர் மனு அளித்துள்ளனர்.
மதுக்கடைகள் தற்காலிகமாக மூடப்பட வேண்டும்