தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

டிடிவி தினகரன் வீட்டு நிகழ்வில் ஆஜரான ஓபிஎஸ் சகோதரர் - டிடிவி தினகரனை சந்தித்த ஓ ராஜா

தஞ்சை மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் நடைபெற்ற டிடிவி தினகரன் மகள் திருமண வரவேற்பு நிகழ்வில் சசிகலா, ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரர் ஓ.ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ஓ. ராஜா - டிடிவி தினகரன் சந்திப்பு
ஓ. ராஜா - டிடிவி தினகரன் சந்திப்பு

By

Published : Oct 27, 2021, 8:50 PM IST

தஞ்சாவூர்:அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மகள் ஜெய ஹரிணி, கிருஷ்ணசாமி வாண்டையார் மகன் ராமநாத துளசி ஐயா வாண்டையார் ஆகியோருக்கு கடந்த செப். 17ஆம் தேதி திருமணம் நடைபெற்றது.

ஒரு மாதம் இடைவேளைக்கு பிறகு அவர்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி தஞ்சாவூரை அடுத்த திருத்துறைப்பூண்டி தனியார் கல்லூரியில் இன்று (அக். 27) நடைபெற்றது. இந்நிகழ்வில், அமமுக பொறுப்பாளர்கள், தொண்டர்கள், தஞ்சாவூரைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

சசிகலா பங்கேற்பு

அதிமுக கொடிக்கட்டிய வாகனத்தில் சென்னையிலிருந்து திருத்துறைப்பூண்டி வந்த சசிகலா, மணமக்களை வாழ்த்திச் சென்றார்.

ஓ. ராஜா - டிடிவி தினகரன் சந்திப்பு

முன்னதாக காங்கிரஸ் எம்பி திருநாவுக்கரசர், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் சகோதரர் ஓ.ராஜா ஆகியோர் மணமக்களை வாழ்த்தினர். அப்போது டிடிவி தினகரன், ஓ.ராஜா உள்ளிட்டோரை சந்தித்துப் பேசினார்.

டிடிவி மகள் திருமண வரவேற்பு நிகழ்வில் சசிகலா

ஓபிஎஸ் உள்பட அதிமுக தரப்பில் யாரும் இந்நிகழ்வில் கலந்துகொள்ளவில்லை. மேலும், சசிகலாவை அதிமுகவில் இணைப்பது குறித்து ஓபிஎஸ் கருத்து தெரிவித்திருந்த நிலையில், ஓ.ராஜா திருமண வரவேற்பில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: அதிமுகவில் ரீ-என்ட்ரி கொடுக்கும் சசிகலா? ஒருவார காலம் சுற்றுப்பயணம் தொடக்கம்!

ABOUT THE AUTHOR

...view details