தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள கோவிலடி திருவள்ளுவர் புரத்தைச் சேர்ந்தவர் அரவிந்தன் (வயது 23). இவர் சென்னையில் சிறப்பு காவல் படையில் பணிபுரிந்து வந்தார்.
இந்நிலையில், அவரது சொந்த ஊரான கோவிலடி கிராமத்திற்கு கடந்த 19ஆம் தேதி சென்றார். பின்னர் மீண்டும் 20ஆம் தேதி திருச்சியில் பணியில் சேர சென்றபோது, அவருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் வைரஸ் பாதிப்பு உறுதிசெய்யப்பட்டது.