தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பட்டுக்கோட்டையில் இடி தாக்கி பெண் உயிரிழப்பு, இருவர் படுகாயம் - இடி தாக்கியதில் பெண் ஒருவர் உயிரிழப்பு

பட்டுக்கோட்டை அருகே நடவுப்பணியில் ஈடுபட்டிருந்த பெண்கள் மீது இடி தாக்கியதில் ஒருவர் உயிரிழந்த நிலையில் இருவர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.

இடி தாக்கியதில் பெண் ஒருவர் உயிரிழப்பு
இடி தாக்கியதில் பெண் ஒருவர் உயிரிழப்பு

By

Published : Oct 18, 2021, 9:47 AM IST

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகேவுள்ள ஆலடிக்குமுளை கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மனைவி மங்களம் (45). இவரும், அதே பகுதியைச் சேர்ந்த லதா, புதுமை நாயகி உள்ளிட்ட 20 பெண்களும் நேற்று (அக். 17) நடவுப் பணிக்காக ஆலடிக்குமுளை கிராமத்தில் தஞ்சை சாலை அருகிலுள்ள வயலுக்குச் சென்றனர்.

மாலை 5.30 மணியளவில் இவர்கள் நடவுப் பணியில் ஈடுபட்டிருந்தபோது திடீரென பலத்த மழை பெய்தது. பின்னர் பயங்கர சத்தத்துடன் இடி இடித்தது. இந்த இடி வயலில் வேலை பார்த்துக் கொண்டிருந்த மங்களம், லதா, புதுமை நாயகி ஆகியோரைத் தாக்கியது.

இதில் மங்களம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். லதா, புதுமை நாயகி ஆகியோர் காயமடைந்த நிலையில் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க:மின்னல் தாக்கி மீனவர் ஒருவர் உயிரிழப்பு - எட்டு பேர் காயம்

ABOUT THE AUTHOR

...view details