தஞ்சாவூர்: பட்டுக்கோட்டையை அடுத்த பரக்கலக்கோட்டையில் பொதுவுடையார் மத்தியபுரீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இது இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான கோயிலாகும். இந்தக் கோயிலின் சிறப்பம்சம் வாரத்தில் திங்கள் கிழமை மட்டும் இரவு 12 மணிக்கு நடை திறக்கப்பட்டு அதிகாலையில் நடை மூடப்படும்.
ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் திங்கள் கிழமைகள் சோமவாரம் வெகு விமர்சையாக நடைபெறும். இந்நிலையில் நேற்று பொங்கல் பண்டிகையின் போது மட்டும் இக்கோவில் பகலில் நடை திறக்கப்பட்டு சுவாமி தரிசனதுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.