தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மனைவியைக் கொன்றுவிட்டு ரயிலில் பாய்ந்த கணவன்! - man killed her wife and suicide

தஞ்சாவூர்: கும்பகோணம் அருகே மனைவியைக் கொலை செய்துவிட்டு, கணவன் ரயிலில் விழுந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

old man susid

By

Published : Oct 7, 2019, 7:22 AM IST

கும்பகோணத்தை அடுத்த தாராசுரம் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி முனியாண்டி(75). இவரது மனைவி கருப்பாயி(65). குடும்பப் பிரச்சனை காரணமாக முனியாண்டி தனது மனைவியை கடப்பாரையால் தாக்கியுள்ளார். இதில் கருப்பாயி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

அதனைத் தொடர்ந்து முனியாண்டியும் தாராசுரம் ரயில்வே கேட் அருகே சோழன் எக்ஸ்பிரஸ் ரயிலில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார். மேலும், இச்சம்பவம் குறித்து தாலுகா காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details