தஞ்சாவூர் அருகே கூடலூர் மேலத் தெருவைச் சேர்ந்தவர் கோவிந்தராஜன் (வயது 65). இவருக்கும், பக்கத்து வீட்டில் வசிக்கும் அண்ணன் பெருமாளுக்கும் (71) இடையே பாதை பிரச்னை தொடர்பாக தகராறு இருந்து வந்தது.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு இருவருக்கும் இடையே ஏற்பட்டத் தகராறில் கோவிந்தராஜன் பலத்த காயமடைந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.