தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

113 வயதில் மிட்டாய் தாத்தாவிற்கு கிடைத்த முதியோர் உதவித்தொகை! - தஞ்சாவூர்

தஞ்சாவூர் : 60 வயதில் கிடைக்க வேண்டிய முதியோர் உதவித் தொகை,113 வயதில் மிட்டாய் தாத்தாவிற்கு  மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரையின் உத்தரவின்படி முதியோர் உதவி தொகை கிடைத்தது.

old-man-get-oap-in-thanjavur

By

Published : Sep 30, 2019, 8:20 PM IST

தஞ்சாவூர் ஆடக்காரத் தெருவைச் சேர்ந்தவர் முகமது அபுசாலிஹ். அவருக்கு வயது 113. மியான்மர் எனப்படும் முந்தைய பர்மாவில் வசித்து வந்த இவர் தனது 50 வயதுக்குப் பிறகு தஞ்சாவூருக்கு வந்துள்ளார். தனது உறவினர்கள் யாரும் இல்லாத நிலையில், தஞ்சாவூரில் தனது உழைப்பை மட்டுமே நம்பி சொந்தமாக குழந்தைகள் சாப்பிடும் இனிப்பு மிட்டாய்களை தயாரித்து, அப்பகுதியில் வீதிவீதியாக நடந்து சென்று வியாபாரம் செய்து வருமானம் ஈட்டி, தனது வாழ்க்கையை நடத்தி வந்தார்.

113 வயதில் மிட்டாய் தாத்தாவிற்கு கிடைத்த முதியோர் உதவித்தொகை

மேலும், குறைந்த வருமானமே ஈட்டி வாடகை வீட்டில் யாருடைய உதவியும் இல்லாமல், சொந்தமாக வாழ்க்கையை நடத்தி வந்த செய்தி அறிந்த மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை, உடனடியாக தஞ்சை தாசில்தாருக்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டதன் அடிப்படையில், 113 வயது மிட்டாய் தாத்தா அபுசாலிஹ்க்கு தமிழக அரசின் சார்பில் வழங்கப்படும் முதியோர் உதவித் தொகைக்கான ஆணை வழங்கப்பட்டது.

ABOUT THE AUTHOR

...view details