தஞ்சாவூர் மாவட்டம் தொம்பன் குடிசை பகுதியைச் சேர்ந்தவர் ராஜப்பா (75). இவர் தஞ்சையில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் கேண்டினில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் வீட்டிற்கு தேவையான பொருள்கள் வாங்குவதற்காக தனது இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.
பின், பொருட்களை வாங்கிவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த ராஜப்பா, தஞ்சை - நாகப்பட்டினம் சாலையில், தொம்பன்குடிசை அருகே சென்று கொண்டிருந்தபோது, பின்னால் உரம் ஏற்றி வந்த லாரி மோதியதில், லாரியின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.