தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் ஜீவா நகரைச் சேர்ந்தவர் தியாகராஜன் (65). அவர் சத்துணவு அமைப்பாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். தற்போது அவர் கள்ளப்பெரம்பூரில் வீடு கட்டி வருவதால், ஜூன் 1ஆம் தேதி குடும்பத்துடன் அங்கே சென்றுள்ளனர்.
சத்துணவு அமைப்பாளர் வீட்டில் தங்கம் முதல் டி.வி. வரை கொள்ளை! - தஞ்சாவூர் மாவட்டச் செய்திகள்
தஞ்சாவூர்: சத்துணவு அமைப்பாளர் வீட்டில் 6 பவுன் தங்க நகைகள், ஒரு கிலோ வெள்ளிப் பொருள்கள், டிவி உள்ளிட்டவற்றை கொள்ளையர்கள் திருடிச் சென்றுள்ளனர்.
அதன்பின் அவரது மகன் பாலமுருகன் என்பவர் பூதலூரில் உள்ள வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது வீடு திறந்திறப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். அவர் உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் வைத்திருந்த இரண்டு கிராம் தங்க காசுகள் நான்கு, 17 அரை கிராம் காசுகள், 3 ஒரு பவுன் செயின், 7 மோதிரம், வெள்ளிக் குத்துவிளக்கு, கிண்ணம், விலை உயர்ந்தப் பட்டுப்புடவைகள், எல்.இ.டி. டிவி, ஹோம் தியேட்டர் உள்ளிட்ட பொருள்கள் கொள்ளை அடிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
அதையடுத்து அவர் தியாகராஜனுக்கு தெரியப்படுத்தினார். அதன்பின் தியாகராஜன் இதுகுறித்து பூதலூர் காவல்துறையில் புகார் அளித்தார். அந்தப் புகாரின் அடிப்படையில் காவல்துறையினர், தடவியல் துறையினருடன் சம்பவயிடத்திற்கு விரைந்து ஆய்வு மேற்கொண்டனர்.