தஞ்சாவூர்: அதிமுக மாநாடு, எழுச்சி மாநாடு அல்ல, எடப்பாடி பழனிசாமியின் வீழ்ச்சி மாநாடு என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். தஞ்சாவூரில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கூறிய அவர், "மதுரையில் நடைபெற்ற அதிமுக மாநாடு, எழுச்சி மாநாடு அல்ல, பழனிசாமி கம்பெனிக்கு வீழ்ச்சி மாநாடு, கூட்டத்திற்கு அதிகபட்சம் 2 முதல் 2.5 லட்சம் பேர் வந்திருப்பார்கள் என அங்குள்ள நிர்வாகிகள், நண்பர்கள் கூறினர்.
புரட்சி என்கிற வார்த்தைக்கு மரியாதை இல்லாமல் போய்விடும், புரட்சித் தமிழர் என்ற பட்டத்திற்கு பதில் துரோகத் தமிழர் என்று பட்டம் வழங்கலாம். காலில் விழுந்து பதவி பெற்றுக்கொண்டது, பதவியில் நீடிக்க காரணமாக இருந்த பன்னீர்செல்வம் போன்றவர்களுக்கு துரோகம் செய்தது, துரோகத்தாலும், பண பலத்தாலும், கட்சியை கபளீகரம் செய்து வைத்திருப்பது தான் சாதனை, அதற்கு தான் புரட்சி செய்தார் என்றால் அது வெட்க கேடான செயல்" என்று தெரிவித்தார்.
திமுகவின் நீட் தேர்வுக்கு எதிரான உண்ணாவிரதம் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், "நீட் தேர்வு குறித்து தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் பேசுவது காமெடியாக உள்ளது. இபிஎஸ் ஆட்சியை எதிர்த்து எதற்கெல்லாம் போராட்டம் நடத்தினாரோ, ஆனால் இன்றைக்கு அவரே ஹிட்லர் மாதிரி அதை நிறைவேற்றுகிறார். கொடுத்த வாக்குறுதிக்கு எதிராக செயல்படுகிறார்.