தஞ்சாவூர்: வைகாசி மாத அமாவாசையை முன்னிட்டு இன்று கும்பகோணத்தில் உள்ள ஒன்பதடி உயரம் கொண்ட விஷ்வரூப ஜெயமாருதி ஆஞ்சநேயசுவாமி நவதானிய அலங்காரத்தில் பக்தர்களுக்கு சேவை சாதிக்க அனைத்து ஜீவராசிகளையும் கோடை வெப்பத்தில் இருந்து காக்க வேண்டும் என்றும்; தேவையான அளவு நல்ல மழை பெய்ய வேண்டும் என்ற பொது பிரார்த்தனையுடனும், திரிசதி மற்றும் சகஸ்கரநாம அர்ச்சனையும் 1001 முறை இராம நாம ஜெபத்துடன் சிறப்பு பூஜைகளும் நடைபெற்ற பிறகு பஞ்சாரார்த்தியும் செய்யப்பட்டது.
இதில் ஏராளமான பெண்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டு ஆஞ்சநேயரை தரிசனம் செய்து மகிழ்ந்தனர். அனுமன் சர்வ தேவதா சக்திகளின் அம்சம், புத்தி, கீர்த்தி, பலம், தைரியம், மனோ சக்தி ஆகியவற்றை அருள்பவரான அனுமனை வரம் அருளும் மூர்த்தி என்றும்; வேண்டியவர்களுக்கு வேண்டியதை அருளும் வரப்பிரசாதி இவர் என்பதால் பக்தர்கள் இவருக்கு பிரார்த்தனைகள் செய்து கிரக தோஷம் நீங்க, இவருக்கு வடை மாலை சாத்தியும், கல்வியில் தடை, சுணக்கம் நீங்க வெற்றிலை மாலை சாத்தியும், பிரிந்த தம்பதியினர் சேர தேங்காய் மாலையும்,
தடைகள் நீங்கி உயர் பதவி அடைய துளசி மாலை சாத்தியும், தீராத நோய் தீர வெண்ணெய் காப்பு சாத்தியும், குழந்தை பேறு கிட்ட சந்தனக் காப்பு சாத்தியும் வழிபடுவது போன்ற முக்கிய பிரார்த்தனைகளில் ஈடுபட்டனர். இத்தகைய பெருமை கொண்ட ஆஞ்சநேயரை போற்றி வணங்கும் வகையில் கும்பகோணம் பாலக்கரை விஷ்வரூப ஜெயமாருதி ஆஞ்சநேயசுவாமிக்கு அனைத்து ஜீவராசிகளின் நன்மைக்காகவும்; தேவையான அளவிற்கு நல்ல மழை பெய்து, நவதானியங்கள், காய்கனிகள் உள்ளிட்ட அனைத்து வகை வேளாண் பொருட்களும் அமோக விளைச்சல் காணவும்,