தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மாநில தூய்மைப் பணியாளர் ஆணையம் அமைக்கக் கோரி ஆளுநருக்கு கடிதம் - NCSK தலைவர் தகவல் - NCSK தலைவர் தகவல்

தமிழகத்தில் தூய்மைப் பணியாளர்களுக்கு Direct Payment system வழங்க வேண்டும் எனவும்; விஷ வாயுவால் தூய்மைப் பணியாளர்கள் உயிரிழப்பது இங்கு மட்டுமே அதிகம் எனவும் தேசிய தூய்மைப் பணியாளர் ஆணைய தலைவர் வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat

By

Published : May 13, 2023, 10:29 PM IST

மாநில தூய்மைப் பணியாளர் ஆணையம் அமைக்கக் கோரி ஆளுநருக்கு கடிதம் - NCSK தலைவர் தகவல்

தஞ்சாவூர்: தஞ்சாவூரில் தேசிய தூய்மைப் பணியாளர் ஆணையத்தின் தலைவர் வெங்கடேசன், மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், மற்றும் மாநகராட்சி ஆணையர் சரவணகுமார் உள்ளிட்டோர் தஞ்சை வடக்கு வாசல் பகுதியில் உள்ள தூய்மை பணியாளர்களின் குடியிருப்பில் இன்று (மே.13) சென்று அப்பணியாளர்களின் குறைகளைக் கேட்டறிந்தனர்.

மாநில அளவில் ஆணையம்:பின்னர் செய்தியாளர்களிடம் ஆணையத் தலைவர் வெங்கடேசன் கூறும்போது, தூய்மை பணியாளர்களுக்கு தேசிய அளவில் ஆணையம் உள்ளது. அதைப்போல, மாநில அளவில் தூய்மைப் பணியாளர்களுக்கு ஆணையம் அமைக்க வேண்டும் என ஆளுநரிடம் கடிதம் அளிக்கப்பட்டுள்ளது.

அதைப்போல, தேசிய அளவில் தூய்மைப் பணியாளர்களுக்கு கடன் வழங்க மற்றும் திட்டங்கள் செயல்படுத்த Finance and Development Corporation இயங்கி வருவதாகவும், இவையும் மாநில அளவில் வேண்டும் என்ற கோரிக்கை ஆளுநரிடம் கொடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

நிரந்தர வேலையும், நேரடி ஊதியமும்: மேலும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து இவை குறித்து கோரிக்கை வைக்க உள்ளதாகவும், இந்தியாவில் 11 மாநிலங்களில் மாநில அளவிலான ஆணையம் உள்ளது, ஆகையால் தமிழ்நாட்டிலும் ஆணையம் அமைக்க வேண்டுமென கேட்டுக் கொண்டார். இந்த நிலையில், பணியாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் வேலையை ரத்து செய்ய வேண்டும், தமிழக அரசே அவர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும், அல்லது நிரந்தர வேலை வழங்க வேண்டும், கர்நாடக மாநிலத்தில் உள்ளது போல் Direct payment system மூலம் தூய்மை பணியாளர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும், ஒப்பந்த முறையில் முறைகேடுகள் உள்ளதால் Direct payment system தொடர்ந்து வலியுறுத்தி வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

விஷவாயு உயிரிழப்புகள்; சிறப்பு திட்டம் தேவை:தமிழகத்தில் விஷவாயு தாக்கி இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதால், தமிழக அரசு இதில் முழுகவனம் செலுத்தி சிறப்பு திட்டத்தை செயல்படுத்த வேண்டும், உயிரிழப்பை தடுப்பதற்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியம் என்றும் தெரிவித்தார். இந்த ஆய்வின்போது, மாநகர நல அலுவலர் சுபாஷ்காந்தி, கவுன்சிலர்கள் ஜெய்சதீஷ், விஜயபாபு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க:விஷவாயு தாக்கி உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு அரசுப் பணி

ABOUT THE AUTHOR

...view details