தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குலதெய்வக்கோயிலில் பொங்கலிட்டு வழிபட்ட நயன்தாரா, விக்னேஷ் சிவன் - Vignesh Shivan

தஞ்சாவூர் மாவட்டம், மேலவழுத்தூர் ஆற்றங்கரை ஸ்ரீகாஞ்சி காமாட்சியம்மன் கோயிலில் நடிகை நயன்தாரா மற்றும் அவரது காதலர் விக்னேஷ் சிவன் ஆகியோர் பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடு செய்தனர்.

நயன்தாரா
நயன்தாரா

By

Published : May 23, 2022, 10:50 PM IST

வரும் ஜூன் 9ஆம் தேதி நயன்தாராவுக்கும் விக்னேஷ் சிவனுக்கும் திருமணம் நடைபெற இருக்கும் நிலையில், இயக்குநர் விக்னேஷ் சிவனின் குலதெய்வக்கோயிலான ஆற்றங்கரை ஸ்ரீகாஞ்சி காமாட்சியம்மன் கோயிலில் சிறப்பு அபிஷேக, ஆராதனை செய்து கிராம மக்களுடன் மண்பானையில் சர்க்கரை பொங்கல் வைத்து சுவாமிக்கு படைத்து வழிபாடு செய்தனர்.

பொங்கல் வைத்த நயன்தாரா

ABOUT THE AUTHOR

...view details