கும்பகோணத்தில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ ஆதி கும்பேஸ்வரர், ஸ்ரீ அபிமுகேஷ்வரர் உள்ளிட்ட சிவாலயங்களில் நவராத்திரி விழாவை முன்னிட்டு கொலு கண்காட்சி தொடங்கியது. இதில் சுமார் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த கொலு பொம்மைகள் புதுப்பிக்கப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
தஞ்சையை ஆண்ட சரபோஜி மன்னரின் அரசவை தர்பார், அஷ்ட லட்சுமிகளின் தத்ரூப பொம்மைகள், உள்ளிட்ட பல பொம்மைகள் ஆலயத்திற்கு வரும் பக்தர்களை வியக்க வைத்தது. மேலும் கோயில் முழுவதும் தோரணங்களாலும், வண்ண விளக்குகளாலும் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் இந்த நவராத்திரி விழாவை காண ஏராளமான பக்தர்கள் வந்து கொண்டிருக்கிறார்கள்.