தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'ஊட்டச்சத்து குறைபாடுதான் அனைத்து வியாதிகளுக்கும் மூல காரணம்' - தஞ்சை சமூக நலத்துறை அலுவலர் - தஞ்சையில் நவ தானியக் கண்காட்சி

தஞ்சை: ஊட்டச்சத்து குறைபாடுதான் இன்றைய அனைத்து வியாதிகளுக்கும் மூல காரணம், ஆகையால் நல்ல ஊட்டச்சத்து உள்ள உணவுகளை சாப்பிட வேண்டும் என்று பள்ளி மாணவர்களுக்கு தஞ்சை சமூக நலத்துறை அலுவலர் அறிவுறுத்தினார்.

national-nutrition-event-held-in-thanjai

By

Published : Sep 24, 2019, 11:09 PM IST

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரியில், தேசிய ஊட்டச்சத்து விழா நடைபெற்றது. இதில் அம்மாவட்ட சமூக நலத்துறை மாவட்ட அலுவலர் ராஜேஸ்வரி கலந்து கொண்டார்.

விழாவில் அடைக்கப்பட்ட கண்காட்சியின் நுழைவாயிலில் அமைக்கப்பட்ட நவ தானியங்களால் வரையப்பட்ட ஓவியங்கள் வந்திருந்த அனைவரையும் கவர செய்தது. இது தவிர விழாவில் எட்டு வயது சிறுமியின் பரதநாட்டிய நிகழ்ச்சியால் விழா மேலும் களை கட்டியது.

தேசிய ஊட்டச்சத்து விழா

விழாவில் ராஜேஸ்வரி பேசும்போது, 'ஊட்டச்சத்து குறைபாடு தான் இன்றைய அனைத்து வியாதிகளுக்கும் மூல காரணம் குழந்தைகள், பள்ளி மாணவியர்கள் நல்ல ஊட்டச்சத்துள்ள உணவுகளை சாப்பிட வேண்டும் இல்லையென்றால் கல்வியிலும் சரி செயல்பாடுகளிலும் சரி பின்னடைவுதான் ஏற்படும் எனவே இங்கு கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ள ஊட்டச்சத்துள்ள உணவுப் பொருட்கள் எவை என கண்டறிந்து அவற்றை தொடர்ந்து சாப்பிட்டு வர வேண்டும் இது அனைத்து விதத்திலும் நன்மை பயக்கும். மாணவர்கள் கட்டாயம் இதை பின்பற்ற வேண்டும்" என்று அறிவுறித்தினார். இந்நிகழ்ச்சியில் ஏராளமான சமூக நலத் துறை சார்ந்த பணியாளர்கள், பள்ளி மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர்.

ABOUT THE AUTHOR

...view details