தஞ்சாவூர்:கோடை கால பழங்களில் ஒன்றான மாம்பழம், பழங்களில் ராஜாவாக போற்றப்படுகிறது. இதன் பூர்வீகம் மியான்மர், வடகிழக்கு இந்தியா, இந்தோனேசியா ஆகும். சுமார் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மாம்பழங்கள் இந்தியாவில் விளைவிக்கப்பட்டன. உலகளவில் அதிக இந்தியாவில் ஆண்டிற்கு 20 மில்லியன் டன் மாம்பழங்கள் ஆண்டு தோறும் பயிரிடப்படுகிறது.
அதற்கு அடுத்து இந்தோனேசியா விளங்குகிறது, மாமரங்கள் வகைக்கு ஏற்ப நூறு அடி உயரம் வரை வளரக்கூடியவை, மாம்பழங்களில் 20 தனித்துவமான தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் அடங்கியுள்ளது. பங்களாதேஷின் தேசிய மரமாக விளங்குகிறது. இந்த மாமரம், ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 22ஆம் நாள், தேசிய மாம்பழ தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
இதனை போற்றிடும் வகையில், கும்பகோணம் செட்டிமண்டபம் புறவழிச்சாலையில் அமைந்துள்ள கார்த்தி வித்யாலயா மெட்ரிக் பள்ளியில் நிறுவனர் கார்த்திகேயன் தலைமையில் மாம்பழ தின கொண்டாட்டம் நடைபெற்றது. நூற்றுக்கணக்காண மழலையர்கள் மாம்பழம் போல தோற்றம் அளிக்கும் வகையில் மஞ்சள் நிறத்தில் உடையணிந்தும், தலையில் மா இலைகளை கீரிடம் போல அணிந்தும் உற்சாகமாக கலந்து கொண்டனர்.