தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கும்பகோணம் மாநகராட்சியில் தலைகீழாக ஏற்றப்பட்ட தேசியக்கொடி

கும்பகோணத்தில் சுதந்திர நாள் கொண்டாட்டத்தில் தேசியக்கொடியை தலைகீழாக ஏற்றிய சம்பவம் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.

கும்பகோணம் மாநகராட்சியில் தலைகீழாக ஏற்றப்பட்ட தேசியக்கொடி
கும்பகோணம் மாநகராட்சியில் தலைகீழாக ஏற்றப்பட்ட தேசியக்கொடி

By

Published : Aug 15, 2022, 8:04 PM IST

தஞ்சாவூர்:கும்பகோணம் மாநகராட்சியில் சுதந்திர தினத்தை முன்னிட்டு கும்பகோணம் மாநகராட்சியின் முதல் மேயரான காங்கிரஸ் கட்சியின் முதல் மேயர் கே. சரவணன், துணை மேயர் சு.ப தமிழழகன் (திமுக) மற்றும் ஆணையர் செந்தில் முருகன் முன்னிலையில் தேசியக்கொடியினை ஏற்றினார்.

அப்போது தேசியக்கொடி மேலே ஏற்றப்பட்ட பிறகு தான் கொடி தலைகீழாக இருப்பது கண்டு அதிர்ச்சியடைந்து உடனடியாக அருகில் இருந்த துணை மேயர் சு.ப. தமிழழகன் கொடியை விரைவாக கீழே இறக்கி, அவசர அவசரமாக சரியான முறையில் கொடி ஏற்றப்பட்டது.

மேலும் தேசியக் கொடி ஏற்றப்பட்ட பிறகு கொடி வணக்கம் கூட செலுத்தாமல், அடுத்தடுத்த நிகழ்வு நடைபெற்றது கூடுதல் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிகழ்வில் மாமன்ற உறுப்பினர்கள் பள்ளி மாணவ மாணவியர்கள், மாநகராட்சி ஊழியர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

முதல் மேயரான காங்கிரஸ் கட்சியின் கே. சரவணன், தலைகீழாக கொடியேற்ற காரணமாக இருந்த சம்பந்தப்பட்ட மாநகராட்சி அலுவலர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். முதல் மேயர் 75ஆவது ஆண்டு நிறைவு சுதந்திர தின கொண்டாட்டத்தில் தேசியக்கொடியை தலைகீழாக ஏற்றிய சம்பவம் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.

கும்பகோணம் மாநகராட்சியில் தலைகீழாக ஏற்றப்பட்ட தேசியக்கொடி

இதையும் படிங்க:சுதந்திர தின விழா -புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி தேசிய கொடி ஏற்றினார்

ABOUT THE AUTHOR

...view details