இந்திய எலும்பியல் சங்கத்தின் சார்பாக ஆண்டுதோறும் ஆகஸ்ட் 1 முதல் 7ஆம் தேதி வரை எலும்பு மூட்டு வாரம் கடைப்பிடிக்கப்படுகிறது. அந்த வகையில், இந்தாண்டிற்கான கருப்பொருளாக எலும்பு மூட்டுச் சிதைவு நோயினால் ஏற்படும் குறைபாடுகளைத் தடுப்பது குறித்த விழிப்புணர்வு நடவடிக்கைகள் வாரம் முழுவதும் நடைபெற்றுவருகிறது.
அதன் பொருட்டு, தமிழ்நாடு எலும்பியல் சங்கம் மற்றும் தஞ்சை ஆர்த்தோ கிளப் சார்பாக இன்று (ஆகஸ்ட் 6) பட்டுக்கோட்டையில் எலும்பு மூட்டுச் சிதைவு நோயினால் ஏற்படும் குறைபாடுகளை எவ்வாறு தடுப்பது என்பது குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.