உள்ளாட்சித் தேர்தலுக்கான இறுதிக்கட்ட வேட்புமனுத் தாக்கல் தீவிரமாக நடைபெற்றது, தான் தூய்மையானவன் என்பதை விளக்கும் வகையில் திருவள்ளுவர், பாரதியார், அப்துல்கலாம் மற்றும் நம்மாழ்வார் வேடமணிந்தவர்களுடன் வேட்புமனு தாக்கல் செய்ய வந்த வேட்பாளர்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 589 ஊராட்சி 14 ஒன்றியம் 5462 ஊராட்சி உறுப்பினர்களுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 9ஆம் தேதி தொடங்கி இன்று முடிவடைந்தது. இந்நிலையில், இறுதி நாளான இன்று ஆயிரக்கணக்கானோர் தங்களது வேட்பு மனுவை தாக்கல் செய்தனர்.
தஞ்சாவூர் ஒன்றியம் நாஞ்சிகோட்டை ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு 10க்கும் மேற்பட்டோர் வேட்புமனு தாக்கல் செய்துள்ள நிலையில், சுயேட்சையாக போட்டியிட தென்னரசு என்பவர் நூதன முறையில் தூய்மையானவன், நேர்மையானவன் என்பதை மக்களுக்கு உணர்த்த வேண்டும் என்ற வகையில் அப்துல்கலாம், பாரதியார், திருவள்ளுவர், இயற்கை விவசாயி நம்மாழ்வார் உள்ளிட்ட வேடமணிந்தவர்களுடன் வேட்புமனுவை தாக்கல் செய்ய வந்தார்.