தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

’திருவள்ளுவர் சிலையை அவமதித்தவர்களை கைது செய்ய வேண்டும்’ - நாதக ஆர்ப்பாட்டம் - naam tamilar thanjavur protest

தஞ்சை: திருவள்ளுவர் சிலையை அவமரியாதை செய்த அடையாளம் தெரியாத நபர்களை கைது செய்ய வலியுறுத்தி நாம் தமிழர் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Namm Tamilar protest for dishonour of thiruvalluvar statue

By

Published : Nov 6, 2019, 5:18 PM IST

தஞ்சை அருகே உள்ள பிள்ளையார்பட்டியில் உள்ள திருவள்ளுவர் சிலையில் நேற்று முன்தினம் அடையாளம் தெரியாத சில நபர்கள் சாணம் வீசி அவமரியாதை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனை எதிர்த்து நேற்று பல்வேறு கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியினர்

இந்நிலையில், திருவள்ளுவர் சிலையை அவமதித்தவர்களைக் காவல் துறையினர் கைது செய்யவில்லை என்று கூறி நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் பேரணியாக வந்து திருவள்ளுவர் சிலை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இதையும் படிங்க: ‘திருவள்ளுவர் இந்து என்பதற்கு வரலாற்றில் ஆதாரமில்லை!’ - அமைச்சர் கே. பாண்டியராஜன்

ABOUT THE AUTHOR

...view details