தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் காசிராமன் தெருவைச் சேர்ந்தவர் வேத வினோத். இவர் சென்னையில் உள்ள தனியார் வங்கியில் பணி புரிந்து வருகிறார். இவரது இரண்டு வயது மகள் கிருத்தன்யாவுக்கு கடந்த சில நாட்களாக மர்மக் காய்ச்சல் ஏற்பட்டது. இதனால் தஞ்சையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
மர்மக் காய்ச்சலால் 2 வயது பெண் குழந்தை உயிரிழப்பு! - இரண்டு வயது குழந்தை மரணம்
தஞ்சாவூர்: கும்பகோணத்தில் மர்மக் காய்ச்சலால் இரண்டு வயது பெண் குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

kiruthanya
இந்நிலையில், குழந்தை கிருத்தன்யா, நேற்றிரவு சிகிச்சை பலனின்றி மருத்துவமனையிலேயே உயிரிழந்தார். இதனையடுத்து குழந்தை கிருத்தன்யாவின் உடலுக்கு பெற்றோர் மற்றும் உறவினர்கள் அஞ்சலி செலுத்தினர். மர்மக் காய்ச்சலால் இரண்டு வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.