தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை தலைமை தபால் நிலையம் அருகில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராகவும் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றக்கோரியும் சிறை நிரப்பும் போராட்டம் நடைபெற்றது.
இந்தப் போராட்டத்தில் சிறைச்சாலை போல் கூடாரம் அமைத்து அதில் சிறுவர்களை அமரவைத்து நூதன முறையில் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் சுமார் 500க்கும் மேற்பட்ட இஸ்லாமிய பெண்கள் உள்பட 1000க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு மத்திய மாநில அரசுகளுக்கு எதிராகக் கோஷங்கள் எழுப்பினர்.
இதேபோல், புதுக்கோட்டை சின்னப்பா பூங்கா திடலில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் உள்ளிட்டோர் சிறை நிரப்பும் போராட்டத்தில் தேசியக் கொடிகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.