தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தஞ்சை வேளாண் கல்லூரிக்கு பெயர் மாற்ற அறிவிப்பு; எம்.எஸ்.சுவாமிநாதனின் குடும்பத்தினர் வரவேற்பு! - எம் எஸ் சுவாமிநாதன்

Dr. M.S.Swaminathan: டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதன் வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் பெயர் சூட்டியமைக்காக அவரது குடும்பத்தினர் மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர் நன்றி தெரிவித்துள்ளனர்.

family-members-are-thanks-to-tn-cm-for-changing-the-name-of-agriculture-college-name
தஞ்சை வேளாண் கல்லூரிக்கு எம்.எஸ்.சுவாமிநாதன் பெயர்: முதலமைச்சர் அறிவிப்பு...குடும்பத்தினர் வரவேற்பு

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 14, 2023, 11:50 AM IST

தஞ்சை வேளாண் கல்லூரிக்கு எம்.எஸ்.சுவாமிநாதன் பெயர்: முதலமைச்சர் அறிவிப்பு...குடும்பத்தினர் வரவேற்பு

தஞ்சாவூர்:வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் நினைவைப் போற்றும் வகையில் தஞ்சாவூர், ஈச்சங்கோட்டையிலுள்ள வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் இனி ‘டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதன் வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்’ என்று அழைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பினை வெளியிட்டதை கொண்டாடும் வகையில், தஞ்சாவூர் மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன் கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு இனிப்புகளை நேற்று (அக்.13) வழங்கி கொண்டாடினார்.

சமீபத்தில் நடைபெற்ற நடப்பு ஆண்டின் இரண்டாவது தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரின்போது, 110 விதியின் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை ஆற்றினார். அப்போது, தஞ்சாவூர் ஈச்சங்கோட்டையில் உள்ள வேளாண் கல்லூரி, இனி எம்.எஸ்.சுவாமிநாதன் கல்லூரி என அழைக்கப்படும் என்று அறிவித்தார்.

அது மட்டுமல்லாமல், இளம் வேளாண்மை மற்றும் மரபியல் துறை சார்ந்த கல்வியில் அதிக மதிப்பெண் பெறும் வேளாண் கல்லூரி மாணவர்களுக்கு எம்.எஸ்.சுவாமிநாதன் பெயரில் ஆண்டுதோறும் விருதுகள் வழங்கப்படும் எனவும் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்தார்.

இது குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் கூறுகையில், ‘வேளாண் அறிவியலை இருபதாம் நூற்றாண்டில் இந்தியாவிற்கு ஏற்றவாறு பயன்படுத்தும் வகையில் பல்வேறு ஆராய்ச்சிகளை வெற்றிகரமாக நிகழ்த்தி, உலகளவில் புகழ் பெற்றவர், டாக்டர் எம்.எஸ். சுவாமிநாதன்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த வேளாண் விஞ்ஞானியான டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதன், இந்திய அளவில் முத்திரை பதித்து உலகளவில் புகழ் பெற்றவர். பத்ம விபூஷன், ரமோன் மகசசே உள்ளிட்ட உயரிய விருதுகளைப் பெற்று உள்ளார். அவரது நினைவைப் போற்றுகின்ற வண்ணம், தமிழ்நாடு அரசின் சார்பில் இந்த அறிவிப்பை வெளியிடுகிறேன்” என்றார்.

அதில், “தஞ்சை மாவட்டம் ஈச்சங்கோட்டையில் உள்ள வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் இனி டாக்டர் எம்.எஸ். சுவாமிநாதன் வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் என்ற பெயரில் செயல்படும்” என தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்தார்.

இந்த அறிவிப்பினை முன்னிட்டு, டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதன் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன் டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதன் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

பின்னர் மாணவ, மாணவியர்களுக்கு இனிப்புகள் வழங்கினார். மேலும், வேளாண் விஞ்ஞானி டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதன் பெயரை வேளாண்மைக் கல்லூரிக்கு அறிவித்த தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றிகளைத் தெரிவித்தனர்.

இந்நிகழ்வில் கல்லூரி முதல்வர் வேலாயுதம், வேளாண்மைத்துறை இணை இயக்குநர் நல்லமுத்து ராஜா மற்றும் மாணவ, மாணவியர், கல்லூரி பேராசிரியர்கள், அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதே போல் எம்.எஸ்.சுவாமிநாதன் மகள் செளமியா சுவாமிநாதன், முதலமைச்சர்க்கு நன்றி தெரிவிக்கும் விதாமாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதையும் படிங்க:கருகும் சம்பா சாகுபடி; கடைசி நம்பிக்கையையும் இழக்காத விவசாயிகள்.. குடத்தில் தண்ணீர் எடுத்து ஊற்றும் அவலம்!

ABOUT THE AUTHOR

...view details