தஞ்சாவூர் மாவட்டத்தில் 63 அம்மா மினி கிளினிக் திறந்து வைக்கும் நிகழ்வு தஞ்சையை அடுத்த ராவுசாபட்டியில் நடைபெற்றது. இதனை தஞ்சை மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவ், மாநிலங்களைவை உறுப்பினர் வைத்திலிங்கம் உள்ளிட்டோர் திறந்து வைத்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வைத்திலிங்கம், "முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர், அப்போதைய திமுக தலைவர் கருணாநிதி மீது ஆளுநரிடம் புகார் அளித்தார். சர்க்காரியா கமிஷன் விசாரித்தது. தற்போது இதன் மூலம் யார் வேண்டுமானாலும் யார், மீதும் ஊழல் புகார் அளிக்கலாம், இறுதியில் தீர்ப்பு வரும் போது தான் உண்மை தெரியும்.