தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இருசக்கர வாகனத்தின் மீது சரக்கு வாகனம் மோதி விபத்து - இருவர் உயிரிழப்பு! - காவல்துறை விசாரணை

தஞ்சாவூர்: திருவையாறு அருகே இருசக்கர வாகனம் மீது சரக்கு வாகனம் மோதிய விபத்தில், இருசக்கர வாகனத்தில் சென்ற இருவர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Motorcyclist crashes into a two-wheeler
Motorcyclist crashes into a two-wheeler

By

Published : Jun 25, 2020, 2:57 AM IST

தசஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அடுத்த கீழத்திருப்பூந்துருத்தி பகுதியை சேர்ந்தவர்கள் சேர்ந்த உமாபதி(35), சண்முகம்(60). இவர்கள் இருவரும் வாழைமரத்தில் பூ நாறு உரிக்கும் வேலை செய்துவருகிறார்கள். இந்நிலையில் இன்று மதியம் கண்டியூரிலிருந்து இருவரும் வேலையை முடித்துக்கொண்டு , கீழத்திருப்பூந்துருத்திக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர்.

அப்போது பாத்திமா நகர் அருகேவுள்ள மெயின்ரோட்டில் வரும்போது, எதிரே வந்த சரக்கு வாகனம் இருசக்கர வாகனத்தில் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற உமாபதி, சண்முகம் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருவையாறு காவல்துறையினர், இருவரது உடலையும் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக திருவையாறு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details