தஞ்சாவூர்: தாய்ப்பாசம் அனைத்து உயிர்களுக்கும் ஒன்றுதான் என்பதை உணர்த்தும் வகையில், தஞ்சாவூரில் கன்றுக் குட்டியை ஆட்டோவில் எடுத்துச் சென்ற உரிமையாளரைப் பின்தொடர்ந்து, 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஓடிய தாய்ப் பசுவின் பாசம் காண்போரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. மேலும், தாய் பசுவின் பாச போராட்டம் சமூக வலைத்தளத்தில் வைரல் ஆகி வருகிறது.
தஞ்சையில் செக்கடி பகுதியைச் சேர்ந்தவர் சபரிநாதன். இவர் தஞ்சை சிவகங்கை பூங்கா அருகே ஆட்டோ ஓட்டுநராகத் தொழில் செய்து வருகிறார். இவரது வீட்டில் லெட்சுமி என்ற பசு மாடு ஒன்று உள்ளது. இவர் தனது மாட்டை வீட்டில் ஒரு குழந்தையைப் போல வளர்த்து வருகிறார். இந்நிலையில், இந்த பசு மாட்டைத் தினமும் காலையில் மேய்ச்சலுக்காக வெளியே அனுப்புவது வழக்கம்.
அப்போது, பசு மாடு நிறைமாத கர்ப்பமாக இருந்த நிலையில், பசு மாடு தொம்பன் குடிசை பகுதி அருகே திடீர் எனப் பிரசவ வலி ஏற்பட்டு, அங்கேயே கன்றுக் குட்டியை ஈன்றுள்ளது. இதைத் தொடர்ந்து, பசுவை வெகு நேரம் காணவில்லை என்று மாட்டின் உரிமையாளர் பல பகுதிகளில் தேடிப் பார்த்தபோது, கன்றுக்குட்டி அப்பகுதியில் பசு நின்று கொண்டிருந்தது.