தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விஷம் கொடுத்து சிறுமி கொலை; மனநலம் பாதிக்கப்பட்ட தாயும் மரணம்!

தஞ்சாவூர்: பேராவூரணி அருகே மனநலம் பாதிக்கப்பட்ட பெண் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டதோடு, தனது இரண்டு பெண் பெள்ளைகளுக்கும் கொடுத்ததில் ஒரு சிறுமி உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

mother-commits-suicide-by-poisoning-two-children-near-peravurani
mother-commits-suicide-by-poisoning-two-children-near-peravurani

By

Published : Feb 5, 2021, 8:55 AM IST

தஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள கட்டயங்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் மதிவாணன் (45). இவரது மனைவி புவனா (40). இவர்களது இரண்டு பிள்ளைகள் அக்ஷயா (13), ஹேமாஸ்ரீ (10). மேலும் பிள்ளைகள் இருவரும் கட்டயங்காடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் படித்துவந்தனர்.

கடந்த சில ஆண்டுகளாக புவனாவிற்கு மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவந்துள்ளார். இதனா‌ல் மதிவாணன் கோவையில் பார்த்துவந்த தனியார் நிறுவன வேலையை விட்டுவிட்டு வீட்டிலிருந்து மனைவி, பிள்ளைகளைப் பராமரித்துவந்துள்ளார்.

இந்நிலையில் கட்டயங்காடு கிராமத்தில் புதிதாகத் தொடங்கப்பட்ட நேரடி நெல்கொள்முதல் நிலையத்தில் மதிவாணன் வேலைக்குச் சேர்ந்துள்ளார். இதனால் கடந்த சில நாள்களாக மதிவாணன் வேலைக்குச் சென்றுவந்துள்ளார்.

வீட்டிலிருந்த புவனா தென்னைமரத்து வண்டுகளை அழிக்கப் பயன்படுத்தும் செல்பாஸ் மாத்திரைகளை வாங்கிவந்து தண்ணீரில் கரைத்து வயிற்றில் உள்ள பூச்சிகள் சாகும் எனக்கூறி அவரும் குடித்துவிட்டு, தனது இரண்டு பிள்ளைகளுக்கும் கொடுத்துள்ளார். இரவு மதிவாணன் வந்து பார்த்தபோது மூவரும் வாந்தி எடுத்த நிலையில் மயங்கிக் கிடந்துள்ளனர்.

உடனடியாக மூவரையும் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியில் புவனாவும், அக்ஷயாவும் இறந்துள்ளனர். ஆபத்தான நிலையில் ஹேமாஸ்ரீ தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவருகிறார். இது குறித்து திருச்சிற்றம்பலம் காவல் துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை செய்துவருகின்றனர்.

இதையும் படிங்க: மாற்று சமூகத்தினருடன் பழகியதால் விலை போன அமுமுக நிர்வாகி உயிர் - திண்டுக்கலில் பரபரப்பு

ABOUT THE AUTHOR

...view details