தஞ்சாவூர்: கோரிகுளம் பகுதியைச் சேர்ந்தவர் ரங்கேஸ்வரன் - விஜயலட்சுமி தம்பதி. இவர்களுக்கு வித்யா (7), விக்னேஷ் (4) என இரு பிள்ளைகள் உள்ளனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ரங்கேஸ்வரன் உயிரிழந்துள்ளார்.
இதனையடுத்து விஜயலட்சுமிக்கு, அவரது உறவினர் வெற்றிவேல் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இவர்களது பழக்கம் திருமண பந்தத்தைத் தாண்டிய உறவாக மாறியுள்ளது. இந்நிலையில் இவர்களது உறவுக்கு இடையூறாக இருந்த சிறுமி வித்யாவை, வெற்றிவேல் நேற்று (செப். 19) தாக்கியதாகக் கூறப்படுகிறது.
இதில் சம்பவ இடத்திலேயே சிறுமி உயிரிழக்கவே, அவரது உடலை கல்லணை கால்வாயில் வீசியுள்ளனர்.