பட்டுக்கோட்டையில் தமிழ்நாடு அரசின் சிறப்பு குறை தீர்ப்பு முகாம் நடைபெற்றது. இதில், வேளாண்மைத்துறை அமைச்சர் துரைக்கண்ணு கலந்து கொண்டு இலவச வீட்டு மனைப் பட்டா, பட்டா மாறுதல், சமூக பாதுகாப்புத் திட்டம் தொடர்பான உதவிகள், புதிய குடும்ப அட்டை மற்றும் வேளாண் உபகரணங்கள் உள்ளிட்ட 1 கோடியே நாற்பத்து ஏழு லட்சத்து ஐம்பது ஆயிரம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கினார்.
நிகழ்வில் பேசிய அவர், 'தமிழ்நாடு அரசு தற்போது பொங்கல் உதவித்தொகையாக ஆயிரம் ரூபாய் வழங்கியுள்ளது. அதுபோல அனைத்துப் பகுதியிலும் உள்ள நீர்நிலைகள் தூர்வாரப்பட்டு எல்லா ஏரி குளங்களிலும் நீர் நிரம்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான், அதிகளவில் சுமார் 7 ஆயிரத்து 150 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு பயிர்க் காப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ளது.