பட்டுக்கோட்டை அருகில் உள்ள கீழத்தோட்டம் கிராமத்தில் கடலிலிருந்து வெளியான மணல் திட்டுகளால், துறைமுகத்தின் முகத்துவாரம் அடைக்கப்பட்டு மீனவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியானது.
கடலில் மண்திட்டு... மீன்பிடித் தொழில் பாதிப்பு! - பட்டுக்கோட்டை மீன்பிடித் தொழில் கடும் பாதிப்பு
தஞ்சாவூர்: கடலில் இருந்து வெளியான மண் திட்டுகளால் மீன்பிடித் தொழிலுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதை படகில் சென்று பார்வையிட்ட சட்டப்பேரவை உறுப்பினர் சேகர், அதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக மீனவர்களிடம் உறுதியளித்துள்ளார்.
![கடலில் மண்திட்டு... மீன்பிடித் தொழில் பாதிப்பு! mla visit fisherman area pattukottai keezhathottam கடலில் ஏற்பட்டுள்ள மண்திட்டு பட்டுக்கோட்டை மீன்பிடித் தொழில் கடும் பாதிப்பு சட்டப்பேரவை உறுப்பினர் சேகர்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-5206007-thumbnail-3x2-fishermen.jpg)
இந்த நேரத்தில், ஆறு மாத காலமாக மீன்பிடி தொழில் இல்லாமல், கிராமத்தில் உள்ள மீனவர்கள் வருமானமின்றி தவித்து வருகின்றனர். இது குறித்த செய்தி மீனவர்களின் கோரிக்கையோடு ஈடிவி பாரத்தில் வெளியாகியிருந்தது.
இதனையடுத்து பட்டுக்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினர் சேகர் படகு மூலம் துறைமுகப் பகுதிக்குச் சென்று கடல் முகத்துவாரத்தில் உள்ள மண்திட்டுகளைப் பார்வையிட்டார். பின்னர் அங்குத் திரண்டிருந்த மீனவர்களிடம் இது குறித்து முதலமைச்சரிடம் பேசி துறைமுக வாய்க்காலைச் சீரமைத்துத் தருவதாக உறுதியளித்துச் சென்றார்.