தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் அரசு மருத்துவமனையில் கரோனா தனிமைப்படுத்தப்பட்ட வார்டு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதில், போதிய கட்டில்கள் இல்லை என்பதை அறிந்த சட்டப்பேரவை உறுப்பினர் சாக்கோட்டை அன்பழகன் ஐந்து லட்சம் ரூபாய் மதிப்புள்ள 100 கட்டில்களை வழங்கினார்.
கரோனா வார்டுக்கு 100 கட்டில் வழங்கிய எம்எல்ஏ! - Corona Ward
தஞ்சாவூர்: கரோனா தொற்றின் பாதிப்பைக் கருத்தில்கொண்டு சொந்த நிதியிலிருந்து அரசு மருத்துவமனைக்கு 100 கட்டில்களை சட்டப்பேரவை உறுப்பினர் சாக்கோட்டை அன்பழகன் வழங்கினார்.
MLA Sakkottai Anbalagan
இந்நிகழ்ச்சியில் சட்டப்பேரவை உறுப்பினர்களான ராமச்சந்திரன், துரை சந்திரசேகரன், கோவி. செழியன், நகரச் செயலாளர் சுப. தமிழழகன், மருத்துவ அலுவலர் பிரபாகர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க:நாடாளுமன்றம் காலவரையறையின்றி ஒத்திவைப்பு