தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சிறப்பாக பணியாற்றினால் ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு பரிசு: எம்எல்ஏ அறிவிப்பு - Thanjavur latest news

தஞ்சாவூர்: சிறப்பாக பணியாற்றினால் ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு பரிசு வழங்கப்படும் என சட்டப்பேரவை உறுப்பினர் அசோக்குமார் தெரிவித்துள்ளார்.

சிறப்பாக பணியாற்றினால் ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு பரிசு
சிறப்பாக பணியாற்றினால் ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு பரிசு

By

Published : May 18, 2021, 4:59 PM IST

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில் சட்டப்பேரவை உறுப்பினர் அசோக்குமார் தலைமையில் ஊராட்சி மன்ற தலைவர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் இன்று (மே.18) நடைபெற்றது.

அப்போது பேராவூரணி பகுதிக்கு தனது சொந்த செலவில் இரண்டு ஆம்புலன்ஸ்களை சட்டப்பேரவை உறுப்பினர் அசோக்குமார் வழங்கினார். பின்னர் அவர் பேசுகையில், "ஊராட்சி மன்ற தலைவர் பதிவி எம்எல்ஏ பதவிக்கு இணையானது. மக்களை காக்க நீங்கள் அயராது பாடு பட வேண்டும்.

சிறப்பாக பணியாற்றினால் ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு பரிசு

நமது பகுதியில் நோய் தொற்று அறவே இல்லை என்ற நிலையை உருவாக்க வேண்டும். நீங்கள் சிறப்பாக பணியாற்றும் பட்சத்தில் முதலமைச்சர் பெயரில் ஒவ்வொரு ஊராட்சி மன்ற தலைவருக்கும் பரிசு தருவேன்" என்றார்.

இதையும் படிங்க: கரோனா நிவாரணம் வழங்கிய அமைச்சர் மா. சுப்பிரமணியன்

ABOUT THE AUTHOR

...view details