தஞ்சாவூர் : ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ராஜராஜ சோழ மன்னன் காலத்தில் நிலத்தடி நீரை சேமிக்க வெட்டப்பட்ட கள்ளப்பெரம்பூர் ஏரியின் கரையை பலப்படுத்தும் விதமாகவும், நீர் ஆதாரத்தை பாதுகாக்கும் விதமாகவும் கரைகளின் இரண்டு புறங்களும் 5 ஆயிரம் பனை விதைகளும், 5 ஆயிரம் மரக்கன்றுகளும் நடப்பட்டன.
இந்நிலையில், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி 500 மரங்களைக் கொண்ட குருங்காடை திறந்து வைத்தார். தொடர்ந்து பேசிய அவர், ”மாநிலம் முழுவதிலும் உள்ள அரசு பள்ளிகளில் மரம் நடவேண்டும். ரத்ததானம் போல் மரம் நடுவதை மாணவர்கள் பின்பற்றிட வேண்டும் என்றார்.