தஞ்சை வடக்கு மாவட்டத்தில் உள்ள அம்மா உணவகங்களில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவின் பேரில் கடந்த ஒரு வார காலமாக விலையில்லா உணவு வழங்கப்படுகிறது.
இந்த நிலையில் அப்பகுதியில் உள்ள அம்மா உணவகங்களில் முட்டையுடன் கூடிய விலையில்லா உணவு வழங்க திட்டமிடப்பட்டது. அதன் அடிப்படையில் இன்று மக்களுக்கு வேளாண்மைத் துறை அமைச்சர் துரைக்கண்ணு முட்டையுடன் கூடிய விலையில்லா உணவை வழங்கினார்.
விலையில்லா உணவை வழங்கிய அமைச்சர் துரைக்கண்ணு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள வருகிற மூன்றாம் தேதிவரை தொடர்ந்து பொதுமக்களுக்கு விலையில்லாமல் காலை, மாலை, இரவு என 3 வேளைகளும் முட்டையுடன் கூடிய உணவு வழங்கப்படவுள்ளது. இதை ஏழை, எளிய தொழிலாளர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என அமைச்சர் துரைக்கண்ணு தெரிவித்தார்.
இதையும் படிங்க: தென்காசியில் நாளை முழு ஊரடங்கு - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு