தஞ்சாவூர்: சாந்த பிள்ளை கேட் மேம்பாலத்தை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஆகியோர் நெடுஞ்சாலைதுறை அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார். பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர், "நாஞ்சிக்கோட்டை சாலையில் இருந்து ரயிலடி செல்லும் சாந்த பிள்ளை கேட் மேம்பாலத்தில், அதிகபடியான விபத்துகள் நடைபெறுகிறது.
பள்ளி மாணவர்களை வேறு வேலைக்கு பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை- அமைச்சர் அன்பில் மகேஷ் எச்சரிக்கை - tamil latest news
பள்ளிக்கு வரும் குழந்தைகளை படிப்புக்கு மட்டும் பயன்படுத்துங்கள் மீறி வேறு பணிக்கு பயன்படுத்தினால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் எச்சரித்துள்ளார்.
இந்த விபத்துகளை தவிர்க்க புதிய வடிவமைப்பில் உயர் மட்ட பாலம் கட்டுவதற்காக திட்டம் தயாரிக்கப்பட்டு வருகிறது. விரைவில் பணிகள் தொடங்கி மக்கள் பயன்பாட்டிற்கு விட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது" என்றார். பள்ளிக்கு வரும் குழந்தைகளை வேறு வேலைகளுக்கு பயன்படுத்துகின்றனர் என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், “குழந்தைகள் படிக்க வரும் இடம் பள்ளிக்கூடம். அங்கு குழந்தைகளை ஆசிரியர்கள் படிப்புக்கு மட்டும் பயன்படுத்துங்கள், மீறி வேறு பணிக்கு பயன்படுத்தினால், அவர்கள் யாராக இருந்தாலும் துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்” என எச்சரிக்கை விடுத்தார்.
இதையும் படிங்க:ஆளுநருக்கு எதிராக தீர்மானம் கொண்டு வரப்படவில்லை: முதலமைச்சர் ஸ்டாலின் விளக்கம்!