தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பொதுத்தேர்வு எழுத 75 சதவீதம் வருகை அவசியம் - அன்பில் மகேஷ் விளக்கம் - Thanjavur news

வரும் கல்வியாண்டில் 75 சதவீதம் வருகை உள்ள மாணவர்கள் மட்டுமே தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள் என்றும், ஆண்டுக்கு மூன்று நாட்கள் பள்ளிக்கு வந்தாலே பொதுத் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர் என்ற செய்தி தவறானது என்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

‘3 நாள் போதாது.. 75 சதவீதம் வருகை அவசியம்’ - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் விளக்கம்!
‘3 நாள் போதாது.. 75 சதவீதம் வருகை அவசியம்’ - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் விளக்கம்!

By

Published : Mar 18, 2023, 4:04 PM IST

தஞ்சாவூர்:தஞ்சாவூர் பழைய பேருந்து நிலைய மாநகராட்சி திடலில் ‘ஓயா உழைப்பின் ஓராண்டு! கடைக்கோடி தமிழரின் கனவுகளை தாங்கி’ என்ற தலைப்பில் அரசின் சாதனை விளக்கப் புகைப்படக் கண்காட்சி இன்று (மார்ச் 18) நடைபெற்றது. இந்த கண்காட்சியினை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ், “தற்போது தேர்வு எழுதும் மாணவர்கள் அனைவரும் 10ஆம் வகுப்பில் ஆல் பாஸ் ஆனவர்கள். கரோனா காலத்தில் தேர்வு எழுத முடியாமல், கடந்த ஆட்சி காலத்தில் ஆல் பாஸ் ஆனவர்கள்தான் தற்போதைய 12ஆம் வகுப்பு பேட்ஜ். அவர்களுக்கு தேர்வு பயம் என்பது, கடந்த இரண்டு ஆண்டுகளாக இருந்திருக்கும்.

எனவே அவர்கள் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத வேண்டும் என்பதற்காகவே, சிறப்புப் பிரிவாக அனைவரும் தேர்வு எழுத வாருங்கள், அனைவருக்கும் ஹால் டிக்கெட் தருகிறோம் எனக் கூறினோம். தொடர்ந்து இந்த நடைமுறை பின்பற்றப்படாது. ஆண்டுக்கு 3 நாட்கள் பள்ளிக்கு வந்தாலே போதும், பொதுத் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர் என்ற செய்தி தவறானது. கரோனா காலத்தில் பள்ளிகள் முழுமையாக செயல்படாமல் உள்ள நேரத்தில் அளிக்கப்பட்ட வாய்ப்பே அது.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி

வரும் கல்வியாண்டில் (2023 - 2024) 75 சதவீதம் பள்ளிக்கு வரும் மாணவர்கள் மட்டுமே தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள் என்ற நடைமுறையே அமலில் உள்ளது. அதுவே இனி பின்பற்றப்படும்” என தெரிவித்தார். முன்னதாக அமைச்சர் அன்பில் மகேஷ், மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், சட்டமன்ற உறுப்பினர்கள் சந்திரசேகரன், நீலமேகம், மேயர் ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி உள்ளிட்டோர் அரசுத் துறை சார்பில் வைக்கப்பட்டுள்ள பல்வேறு கண்காட்சி அரங்கினை பார்வையிட்டனர்.

இதில் மகளிர் உரிமைத் துறை சார்பில் வைக்கப்பட்டிருந்த கர்ப்பிணி பெண்களுக்கான ஊட்டச்சத்து பொருட்கள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. மேலும் குழந்தைகளுக்கான பொழுதுபோக்கு விளையாட்டு அம்சங்களும் கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன. மேலும் நேற்று (மார்ச் 17) தனியார் கல்லூரியில் நடைபெற்ற தமிழ்க் கனவு நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், அனைத்து மாணவர்களையும் தேர்வு எழுத வைக்க வேண்டும் என்பதுதான் அரசின் நோக்கம் எனவும், அதற்காகத்தான் குறிப்பிட்ட கல்வியாண்டில் 2 நாள், 3 நாள் பள்ளிக்கு வந்தவர்களைக் கூட தேர்வு எழுத அனுமதி அளித்தோம் என தெரிவித்தார். இதனிடையே 3 நாட்கள் பள்ளிக்கு வந்தாலே பொதுத் தேர்வு எழுதலாம் என்ற செய்தி பரவத் தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:2, 3 நாட்கள் வருகைப்பதிவேடு உள்ள மாணவர்களையும் தேர்வு எழுத அனுமதித்தோம் - அமைச்சர் அன்பில் மகேஷ்

ABOUT THE AUTHOR

...view details