தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் மகளிர் பாதுகாப்பு குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடைபெற்ற மினி மராத்தான் ஓட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
ஐந்து கிலோ மீட்டர், 10 கிலோ மீட்டர் தூரம் என இரண்டு பிரிவுகளில் நடைபெற்ற இப்போட்டியில் சுமார் 1200 பேர் கலந்துகொண்டனர். பத்து கிலோமீட்டர் மாரத்தான் போட்டியில் பெண்கள் பிரிவில் ஜெயாபரதன், கொரநாட்டுகருப்பூரைச் சேர்ந்த பைரவி, தஞ்சையைச் சேர்ந்த நிஷா ஸ்ரீ ஆகியோர் முறையே 1, 2, 3ஆம் பரிசுகள் பெற்றனர்.