குடியுரிமை சட்ட திருத்தத்தைக் கண்டித்து மாவட்ட தலைவர் ராஜிக்முகம்மது தலைமையிலும், மாவட்டச் செயலாளர் வல்லம் பாட்ஷா முன்னிலையிலும் பட்டுக்கோட்டையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநில பொதுச்செயலாளர் முஹம்மது கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், ‘இந்து, கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பார்சிகள், ஜெயின், பவுத்த மதத்தினர் ஆகியோருக்கு மட்டும் குடியுரிமை வழங்கிவிட்டு முஸ்லிம்களை மட்டும் புறக்கணிப்பது இந்திய அரசியல் அமைப்பு சட்டத்திற்கு புறம்பானது. இதை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பு கண்டிக்கிறது’ என்றார். இதில் 100 பெண்கள் உட்பட 500க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.