திருவையாறு அருகே நடுக்காவேரி மகாத்மா மெட்ரிக் பள்ளியில் ரோட்டரி சங்கம் சார்பில் இலவச கண் மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமிற்கு ரோட்டரி துணை ஆளுநர் நடராஜன், தஞ்சை சோழா ரோட்டரி சங்கத் தலைவர் மிஸ்ஷேல் தாஸ் முன்னிலை வகித்தனர். பள்ளி தாளாளர் ரெங்கநாதன் அவர்களை வரவேற்று பேசினார்.
இந்நிலையில் முகாமில் நடுக்காவேரி சுற்றுவட்டார பகுதியில் உள்ள 300க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டது. அதில் 50 பேர்களை கண் அறுவை சிகிச்சைக்கான மதுரை அரவிந்த் கண்மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.