தஞ்சாவூர் மாவட்டத்தை பிரித்து கும்பகோணத்தை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் அமைக்க வேண்டும் என்பது இப்பகுதி வணிகர்கள், வழக்கறிஞர்கள், விவசாயிகள், பொது மக்கள் ஆகியோரின் 25 ஆண்டு கால கோரிக்கையாகும். முற்கால சோழர் ஆட்சி காலத்திலும், அதனை தொடர்ந்து ஆங்கிலேயர் ஆட்சி காலத்திலும், கும்பகோணம் தலைநகராக இருந்துள்ளதை பல ஆவணங்கள் மூலம் அறிய முடிகிறது. அத்தகைய வரலாற்று ஆன்மிக சிறப்பு கொண்ட கும்பகோணத்தை மீண்டும் தலைநகராக கொண்டு புதிய மாவட்டம் அமைக்க வேண்டும்.
புதிய மாவட்டம் அமைக்க, அனைத்து துறை ரீதியிலான கட்டமைப்புகளையும் கொண்டுள்ளதாலும், பொது மக்களின் நலன் கருதியும், அரசின் நிர்வாக வசதியை கருத்தில் கொண்டும் நாச்சியார்கோயில், திருப்பனந்தாள், அம்மாப்பேட்டை ஆகிய மூன்று தனி புதிய வட்டங்களை ஏற்படுத்தி கும்பகோணத்தை மாவட்டமாக அறிவிக்க வலியுறுத்தி மதிமுக கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.