தஞ்சை மாவட்ட நிர்வாகம் கரோனா வைரஸ் பரவுவதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் மாவட்டத்தில் உள்ள மருந்துக்கடைகளில் முகக் கவசம் தட்டுப்பாடு நிலவி வருகிறது.
இதனை நீக்கும் பொருட்டு மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் தஞ்சாவூர், கும்பகோணம், பட்டுக்கோட்டை உள்ளிட்ட பகுகளில் முகக் கவசங்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது.
தஞ்சையில் முக கவசம் தயாரிக்கும் பணி் தஞ்சை மாவட்டத்தில் உள்ள 14 ஒன்றியங்களில் 23 இடங்களில் மகளிர் சுயஉதவிக் குழுக்களைச் சேர்ந்த 150 பேர் இந்த பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நாளொன்றுக்கு 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முகக் கவசங்கள் தயாரிக்கப்படுகின்றன. இங்கு தயாரிக்கப்படும் முகக் கவசம் ஒன்றின் விலை 16 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: அரசு உத்தரவை மீறி திறக்கப்பட்ட பார்: சீல் வைத்த கலால் துறையினர்