கும்பகோணம் அருகே கிருஷ்ணாபுரம் பகுதியைச் சார்ந்த சிவஜோதிக்கும், ஏரவாஞ்சேரி பகுதியைச் சார்ந்த கார்த்திகா என்பவருக்கும் இரண்டு மாதங்கள் முன்பு திருமணம் நிச்சயிக்கப்பட்டது.
இந்நிலையில், இன்று திருமண மண்டபத்தில் நடக்கவிருந்த திருமணம், ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில், திருமணத்தை நிறுத்த மனமின்றி வீட்டிற்கு அருகே உள்ள சிறிய கோயிலில் எளிய முறையில் திருமணம் நடைபெற்றது.
இத்திருமணத்தில், மணமக்களுக்கு நெருங்கிய உறவினர்கள் மட்டும் கலந்து கொண்டனர். மேலும், திருமணத்தில் கலந்து கொண்டவர்கள் கைகளை சோப் போட்டு கழுவிய பின்னரே, திருமணத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.
20 பேர் மட்டுமே கலந்து கொண்ட திருமண விழா மேலும், திருமணத்திற்கு முன்பாகவும் பின்பாகவும் கோயிலில் கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்யப்பட்டது. திருமணம் நடந்த அரை மணி நேரத்திலேயே உறவினர்கள் அனைவரும் கலைந்து சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:தீயணைப்புத் துறையின் வெறித்தன விழிப்புணர்வு