டெல்டா மாவட்டங்களில் கடந்த 8 ஆண்டுகளாக குறுவை சாகுபடி பாதிக்கபட்டுள்ளது. இந்த ஆண்டு மின் மோட்டாரை பயன்படுத்தி தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் சுமார் 37 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் குறுவை சாகுபடி செய்த விவசாயிகள் 20,000 ஹெக்டர் நிலங்களில் அறுவடை செய்த நிலையில் மீதமுள்ள 17,000 ஹெக்டேர் நிலங்களில் அறுவடை செய்ய இருந்தனர்.
இந்நிலையில் தஞ்சையில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்த மழை காரணமாக கள்ளபெரம்பூர், ஆலக்குடி, தென்னங்குடி, உள்ளிட்ட பகுதிகளில் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன. இதேபோல் ஆற்று நீரை நம்பி 500 ஏக்கருக்கு மேல் செய்யப்பட்ட சம்பா சாகுபடி நாற்றங்காலும் நீரில் மூழ்கி உள்ளது.