தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் இந்தி, சமஸ்கிருதத்தை மறைமுகமாக புகுத்தி, குலக்கல்வி திட்டத்தை அமல்படுத்த வகை செய்யும் மத்திய அரசின் புதிய கல்வி திட்டத்தை கண்டித்து, இயற்கை வளங்களை தனியாருக்கு தாரை வார்க்க வகை செய்யும் மத்திய அரசின் இஐஏ 2020ஐ வரைவு சட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்தியும், மாவட்டம் ஆவதற்கு அனைத்து தகுதிகளை கொண்ட கும்பகோணத்தை தலைமையிடமாக கொண்ட புதிய மாவட்டம் அமைக்க வலியுறுத்தியும் காந்தி பூங்கா முன்பு, இன்று (ஆகஸ்ட் 17) மனித நேய மக்கள் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மத்திய அரசை கண்டித்து மனிதநேய மக்கள் கட்சி ஆர்ப்பாட்டம்! - தஞ்சாவூர் கும்பகோணம்
தஞ்சாவூர்: கும்பகோணத்தில் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
Manithaneya makkal katchi protest
இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட துணைத்தலைவர் சம்சுதீன் தலைமை தாங்கினார். இதில் ஐம்பதுக்கு மேற்பட்டோர் தகுந்த இடைவெளியுடன் திரண்டு கோரிக்கை முழக்க கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.