தஞ்சாவூர் மாவட்டம் குலசேகரநல்லுார் வடக்குத்தெரு சேர்ந்தவர் சுப்புராயன் மகன் இளையராஜா (34). இவர் அப்பகுதியிலுள்ள ஆற்றில் அனுமதியின்றி மணல் கடத்திவருவதாகக் கூறப்படுகிறது. கொள்ளிடம் ஆற்றில் மணல் கடத்தியதாக இவருக்குச் சொந்தமான மூன்று டிராக்டர்களை, பந்தநல்லுார் காவல் துறையினர் மணல் கடத்தியாகப் பறிமுதல்செய்தனர்.
பந்தநல்லூர் மருத்துவமனையில் கரோனா பாதிப்பால் சிகிச்சைப் பெற்றுவந்த இளையராஜா, தனக்குச் சொந்தமான வாகனத்தைப் பறிமுதல்செய்ததை அறிந்து பந்தநல்லுார் காவல் நிலையத்திற்கு வந்துள்ளார்.
அங்கு காவல் நிலையத்தில், ஒரு பெண் காவலரைத் தவிர ஆய்வாளர், மற்ற காவலர் இல்லாததால், தனது செல்போனில் செல்ஃபி கேமரா மூலம் காணொலி எடுத்தபடி காவலர்களைச் சரமாரியாகத் தகாத வார்த்தைகளால் திட்டித் தீர்த்தார்.
"மணல் திருடுவதற்குப் பணம் வாங்கிய காவலர்கள் அனைவரையும் உள்ளே வைத்து விடுவேன். எல்லாம் திருட்டு பயலுக. எனக்கு கரோனா உள்ளது. என்னைத் தொட முடியாது தொட்டால் செத்தான் அவன்.
எவ்வளவு திமிர் இருந்தால் என்னை வீட்டு காசை லட்சம் லட்சமாகத் தின்றுவிட்டு, என்னோட வாகனத்தைச் பறிமுதல் செய்வீர்களா, அவ்வளவு திமிரா உங்களுக்கு. இன்ஸ்பெக்டர் எங்கே, யாருமே இல்லையா காசு மட்டும் வாங்க தெரிகிறது என ஆரம்பித்து தகாத வார்த்தைகளில் பந்தநல்லுார் காவல் நிலையத்திற்கு முன் பேசி, வாட்ஸ்அப்பில் வெளியிட்டார்.